கிளிநொச்சியிலிருந்து, வவுனியாவிற்கு போதைப்பொருள் கடத்த முயற்சித்த நபர் கைது

கிளிநொச்சியிலிருந்து, வவுனியாவிற்கு கேரள கஞ்சா போதைப்பொருளினை எடுத்துச்செல்ல முயற்சித்த நபரொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சியைச் சேர்ந்த 39 வயதான கதிர்காமநாதன் கார்த்தீபன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

   

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்