கனடா பிரதமர் விரும்பும் இலங்கை உணவு!

இலங்கையில் பிரபல்யமான கொத்து ரொட்டி உணவின் மீது கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெரு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் கொத்து ரொட்டி உணவினை சுட்டிக்காட்டி தமது விருப்பத்தினைத் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் தமிழ் அகதிகள் அதிகமாக வசிக்கும் நிவ்பவுன்ட்லேன்ட் பகுதிக்கும் ரூடோ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இலங்கை இன்னும் சமாதானத்தை முழுமையாக அடைந்து விடவில்லை எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னரும் கனடாவின் கரையோரப் பகுதிகளில் தஞ்சம் புகும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ரூடோ சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்