பிரித்தானியாவில் 2019வரை வட்டி வீத உயர்வில்லை – ஆய்வில் தகவல்

பிரித்தானியாவில் பணவீக்கத்துக்கான இலக்கு காணப்படும் போதிலும், எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை வட்டி வீதம் உயர்வடையும் என்று பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கவில்லை என ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பிரெக்சிற்றுக்கான பேச்சுவார்த்தையின்போது, பிரித்தானியாவுக்கான நாணயக் கொள்கை வங்கிக் குழுவினர், வட்டி வீதத்தை உயர்த்துவதில் தயக்கம் காட்டுவதாகப் பலர் கருதுகின்றனர் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து அடிப்படை வட்டி வீதமானது 0.25ஆக குறைந்துள்ளது.

ஜுலை மாதம் 2.6 சதவீதமாக இருந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சுமாரான வட்டி வீத உயர்வு தேவை என பிரித்தானியாவுக்கான நாணயக் கொள்கை வங்கிக் குழு உறுப்பினரான மைக்கேல் சண்டர்ஸ், கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்