வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு கனேடிய பிரதமர் கண்டனம்

வடகொரியாவின் சமீபத்தய அணுவாயுத சோதனைக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியாவின் அணுசக்தி பெருக்க முயற்சிகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜஸ்ரின் ரூடோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வடகொரியாவின் அணுசக்தி சோதனை மற்றும் ஆக்ரோஷமான ஏவுகணை சோதனை திட்டமானது அயல் நாடுகளினதும் சர்வதேச சமூகத்தினதும் பாதுகாப்பிற்கு தெளிவான அச்சுறுத்தலை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி வடகொரியாவின் பெருமளவிலான முயற்சிகளை திறம்பட கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவில் இன்னமும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்