பிரெக்சிற் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுக்க தெரேசா மே தயார்

பிரெக்சிற் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குப் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தயாராகியுள்ளார். இருந்த போதிலும், இந்தப் பேச்சுவார்த்தைக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை என தெரேசா மேயின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற்றுக்கான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த வாரம் முடிந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, எந்தவித முன்னேற்றகரமான தீர்மானங்களையும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எட்டவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான எதிர்கால உறவு தொடர்பான உடன்பாடு பிரித்தானியாவுக்கு எட்டப்பட வேண்டியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ள அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் தனக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளை தக்கவைப்பதற்கான முயற்சியில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரதான பேச்சாளர் மைக்கேல் பார்னியர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், பிரத்தானியாவுடனான எதிர்கால வர்த்தக உறவு தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்