அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் புதிய பாலம்

ஒன்ராறியோவையும் டிட்ரோய்ட்டையும் இணைக்கும் பழைய அம்பாசிடர் பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தினை நிர்மாணிப்பதற்கான அனுமதியை கனடிய மத்திய லிபரல் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறிந்த பாலத்தினை நிர்மானிப்பதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடவுள்ளதாக கனேடிய போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான, போக்குவரத்து அதிகமான இந்த பாலத்தின் 87ஆண்டுகால தனியார் உரிமையாளர், நான்கு வழித்தடங்களைக் கொண்ட பழைய பாலத்திற்கு பதிலாக ஆறு வழித்தடங்களைக் கொண்ட புதிய பாலத்தினை நிர்மானிக்க முடியும் என்று கனேடிய மத்திய போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிர்மானிப்பு பணிகளை மேற்கொள்ளும் வேளையில், அதனால் உள்ளூர் குடியிருப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறித்த அந்த நிறுவனம் சரிவர முகாமை செய்ய வேண்டும் எனவும், குறிப்பாக புதிய பாலம் அமைக்கப்பட்ட பின்னர் பழைய பாலம் இடிக்கப்படும் போது ஏற்படும் தாக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்