கிளிநொச்சியில் புலிகளின் கொள்கலன் மீட்பு!

கிளிநொச்சி கல்மடுக்குளம் பகுதியில் விமானப்படையினரால் வெற்றுக் கொள்கலன் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளினுடையது என சந்தேகிக்கப்படும் குறித்த கொள்கலனில் எவ்வகையான பொருட்கள் இருந்திருக்கலாம் என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தற்போது பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த கொள்கலனை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெற்றுக் கொள்கலன் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சற்றுத் தொலைவிலேயே விடுதலைப்புலிகளின் இரணைமடு விமான ஓடுபாதை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றையதினம் பளைப் பிரதேசத்தில் கிபீர் விமானங்களின் மூலம் வீசப்படும் சக்திவாய்ந்த விமானக் குண்டு கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்