ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்ட கனேடியர் குறித்து அமெரிக்கா தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஃபாரா மொஹமட் ஷிர்டோன் எனப்படும் கனேடியர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடத்தின் தொடர்பாடல் இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து சிரியாவில் போரிடுவதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கரியில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதமே உயிரிழந்துவிட்டதை தற்போது அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் மிகவும் தீவிரமாக தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்துவந்த அவர், ஐ.எஸ் அமைப்பின் முக்கிய போராளியாகவும், அந்த அமைப்புக்கான நிதி சேகரிப்பாளராகவும், ஆட்சேர்ப்பு நபராகவும் செயற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

இவருக்கு எதிராக கனேடிய மத்திய பொலிஸ்துறையும் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்