அடிக்கல்

+++++++++
Mohamed Nizous

அடிக்கல்
அடிக்கடி நாட்டப்படும் கல்.
சில
முன்னேற்றத்தின்
படிக்கல்.
பல
விளம்பரத்துக்காய்
வெற்றுக் கல்

ஆங்காங்கே
அகழ்ந்து பார்த்தால்
அடிக்குப் போன
அடிக்கல்கள்
அடுக்கடுக்காய்
வரக் கூடும்.

நாட்டை முன்னேற்ற
நாட்டிய கற்களிலும்
ஆட்டையைப் போட
நாட்டிய கற்கள் அதிகம்.

விதையை நாட்ட
விருட்சம் வளருவதைப் போல்
அடிக்கல் நாட்ட
அதுவும் வளருமென்றால்
அடிக்கொரு
அடிக்கல் மரத்தால்
ஓசோன் பிரச்சினை
ஒழிந்து போகும்

உள்ளடி
அடிக்க
அடிக்கல் நாட்டுபவர்.
புள்ளடி பெற
புதிதாய் நாட்டுபவர்.
இவர்களுக்கு இடையில்
நல்லவர்கள் சிலர்கள்
நன்மைக்காய்
நாட்டுகிறார்
அடிக்கல்.

அடிக்கல் திட்டங்கள்
அனைத்தும் நிறைவாய்
அமைய வேண்டும்
அனைவரினதும் அவா…!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்