உண்மையில் நடக்க போவதே இதுதான்… ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பிக்கும்.

உண்மையில் நடக்க போவதே இதுதான்… ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பிக்கும்: இந்தியாவே விழிபிதுங்கி நிற்கும்..!!

ஆசிரியர்கள் போராட்டம் போன்று ஒரு பலம் வாய்ந்த போராட்டம் தற்போதைய சூழலில் வேறெதுவும் இருக்க முடியாது.

ஊதிய உயர்வுக்காக மட்டும் தங்களுடைய சங்கங்கள் மூலமாக போராடிப்பெறுபவர்கள், இந்த அரசுப்பள்ளி இருந்தால் தான் அவர்களுக்கு வேலை என்பதை உணர்ந்தால் நிச்சயம் வருவார்கள்.

அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களோடு களமிறங்கினால் போதும், ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பணி நீக்கம் செய்வது இயலாத காரியம்.

நீட் தேர்வு ஒட்டுமொத்த அரசுப்பள்ளிகளுக்கும் மூடுவிழா நடத்தப்போகிறது என்னும் அபாயத்தை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் முதலில் களத்தில் இறங்கினால் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின்அரசு ஆசிரியர்களும் களத்தில் இறங்குவார்கள்.

இது நடந்தேறினால் தமிழகத்தின் ஒட்டுமொத்த மாணவ மாணவிகளும் களத்தில் இறங்குவார்கள்.

இதையொட்டி அவர்களின் பெற்றோர்களும் களத்தில் இறங்குவார்கள். ஆசிரியர்கள் மீது பொதுமக்களுக்கு ஒரு தனிமரியாதை இருப்பதால் ஏனைய பொதுமக்களின் பேராதரவு கிட்டும்.

ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பிக்கும். இந்தியாவே விழிபிதுங்கி நிற்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்