முடி கண்ணாபின்னாவென கொட்டுகிறதா?… வாரம் ஒருமுறை முட்டையை இப்படி பயன்படுத்துங்க…

முடி கண்ணாபின்னாவென கொட்டுகிறதா?… வாரம் ஒருமுறை முட்டையை இப்படி பயன்படுத்துங்க…

குட்டையான கூந்தலாக இருந்தாலும் அது அடர்த்தியாக இருந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். சிலருக்கு அடர்த்தியான கூந்தல் உதிர்ந்து மெலிதாகிவிடும். சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் எலிவால் போல மெலிதாக இருக்கும்.

இந்த இரண்டு வகையினருமே கூந்தலை சாியாகப் பராமரித்து வந்தால் மிக அடர்த்தியான பளபளக்கும் கூந்தலைப் பெற்றுவிட முடியும். அதற்கு சில எளிய வழிமுறைகளை வீட்டிலேயே கையாளலாம்.

கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்வதில் முட்டைக்கு முக்கியப் பங்குண்டு. வாரத்துக்கு ஒரு முறை முட்டையை தலைக்கு உபயோகித்துப் பாருங்கள். அதனால் உண்டாகும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

எண்ணெய் பசையுடைய கூந்தல், வறண்ட கூந்தல் என்ற இரண்டு வகையுண்டு. முட்டை இரண்டு வகையான கூந்தலுக்கும் ஏற்றது தான். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் தான் சிறிது வேறுபாடு உண்டு.

எண்ணெய் கூந்தலில் பயன்படுத்தும் முறை

தலையில் எண்ணெய் அதிகமாக சுரந்தால் கூந்தல் பலம் இழந்து உதிர ஆரம்பிக்கும். அதற்கு முட்டையை கீழ்கண்ட முறையில் பயன்படுத்தலாம்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் ஆலிவ் ஆயிலையும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறினையும் கலந்து தலையில் தடவ வேண்டும். அதை நன்கு ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தாலே முடி உதிர்தல் குறைந்து கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வறண்ட கூந்தலில் உபயோகிக்கும் முறை

வறட்சியான கூந்தலில் மிக எளிமையாக பொடுகு உண்டாகும். அது தலையில் அரிப்பை உண்டாக்கும். அதனாலுயே அதிக முடி உதிர்தல் உண்டாகும்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவோடு கால் கப் ஆலிவ் எண்ணெய், கால் கப் விளக்கெண்ணெய், அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன்பின் சீயக்காய் அல்லது நல்ல ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும்.

வாரம் ஒரு முறை இதைத்தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்