200 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் – மூவர் படுங்காயம் – சாரதி கைது

(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை அட்டன் பிரதான வீதியில் சலங்கந்தை பகுதியில் 09.09.2017 அன்று இரவு 10 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மற்றும் நாவலப்பிட்டி, கண்டி ஆகிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா சலங்கந்தை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், எனினும் வேன் சாரதி அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அதிக மழை காரணமாகவும், பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதன் காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்