பன்சேனை பாரி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மாபெரும் காற்பந்தாட்டப்போட்டி

பன்சேனை பாரி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மாபெரும் காற்பந்தாட்டப்போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (14.9.2017) காலை 8.30 மணியளவில் மண்முனை மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வலயத்தில் உள்ள பன்சேனை பாரி வித்தியாலய காற்பந்தாட்ட பெண்கள் அணிக்கும்இஅம்பிளாந்துறை கலைமகள்மகா வித்தியாலய காற்பந்தாட்ட பெண்கள் அணிகளுக்கிடையிலான காற்பந்தாட்ட சமர் பன்சேனை பாரி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.பாடசாலைகளுக்கிடையிலான சினேக பூர்வமான உறவையும்இசமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் நடைபெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்