பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படும் ரொஹிங்கிய முஸ்லிம் பெண்கள் ! அதிர்ச்சித் தகவல்

மியன்மாரின் ரக்கிங் பிராந்தியத்தில் ரொஹிங்கிய முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக மியன்மார் இராணும் அந்த நாட்டு சிறுபான்மையின மக்களான ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை நடத்திவருகின்றது.
இந்த தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான ரொஹிங்கிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்களாதேஷிற்கு அகதிகளாக சென்றுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது. ரொஹிங்கிய முஸ்லிம்களை மியன்மார் இராணுவம் கொலை செய்து வீடுகள் மற்றும் கிராமங்களை எரியூட்டுவதுடன் பெண்கள் பெருமளவில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பாரபட்சமின்றி வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக மனித உரிமை அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மியன்மாரில் இடம்பெற்றுவரும் இத்தகைய வன்முறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியா குட்டேரஸ் மியன்மார் மக்கள் பிரதிநிதியான ஆங் சான் ஷூ கீ மற்றும் மியன்மார் இராணுவத்தை எச்சரித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்