பலரின் கனவில் தோன்றிய மர்ம மனிதன்!

கடந்த 2006ஆம் ஆண்டு ஒரு பிரபலமான உளவியலாளர் தன்னுடைய கனவில் அடிக்கடி தென்பட்டு வரும் முகத்தை ஓவியமாக வரைந்து தன்னுடைய மேசை மீது வைத்திருந்தார்.

அந்த சமயத்தில் அவரை பார்க்க வந்த நோயாளி ஒருத்தர் அந்த ஓவியத்தை பார்த்து விட்டு அந்த முகத்தை தன்னுடைய கனவிலும் பார்த்து இருப்தாக அந்த உலவியலாரரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு ஆச்சரியம் அடைந்த அந்த உலவியலார் தனக்கு தெரிந்தவர்களிடமும் தன்னுடன் பனி புரிவர்களிடமும் இந்த படத்தை கொடுத்து உள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக இது பரவ ஆரம்பித்து சில மாத கால இடைவேளையிலேயே சுமார் 200௦பேர் இந்த படத்தில் மனிதனை தன்னுடைய கனவிலும் பார்த்திருப்பதாகவும், ஆனால் இந்த மனிதனை வாழ்நாள்லில் நேரில் ஒரு தடவை கூட பார்த்தது இல்லை என்ற ஆச்சரியமான விடயத்தை தெரிவித்துள்ளார்கள்.

இதில் இன்னொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் அந்த முகத்தை பார்த்ததாக கூறிய 2000 பேரும் அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் உலகம் பூராகவும் இந்த முகத்தை பார்த்ததாக கூறியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இந்த உருவத்தை முன் நிறுத்தி This Man.Org என்ற ஒரு வளைதளத்தை அன்றியா நேட்டர்லாந் என்கிறவர் உருவாக்கி உள்ளார்.

இவரும் இந்த உருவத்தை தன்னுடைய கனவில் பார்த்ததாகவும், இது யாரு என்று தெரிந்து கொள்ளும் விதமாக இந்த வளையதளத்தை உருவாக்கியதாகவும் கூறினார்.

இந்த வளைதளத்தை பற்றியும், இந்த நபரை பற்றியும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

பலரின் கனவில் தென்படும் இந்த நபரை முன் வைத்து ஒரு ஆச்சரியமான விளக்கமும் கொடுக்கபடுகிறது.

நாம் அடிக்கடி பார்க்கும் பல மனிதர்களின் முகத்துக்கு ஒத்து போறதாகவும், உதாரணமாக அந்த முகத்தின் ஒரு பகுதியை மறைத்துக்கொண்டு பார்க்கும்போது வயதானவர் போன்ற தோற்றத்தையும், மாற்றொரு பகுதியை மறைத்துக்கொண்டு பார்க்கும்போது இளமையானவர் போன்ற தோற்றத்தையும் கொடுக்கின்றது போன்ற பல தகவல்களையும் முன் வைக்கின்றனர். இந்த மர்ம நபர் உண்மையில் இருக்கின்றாரா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்