டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஓல்டு ஸ்டைல் : இனிமே புதுசா ஏரோபிளேன் தான்.!!

இந்திய வீரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று விளையாடி விட்டு வரும்போது, அவர்களுக்கு ஏற்படும் பயணக் களைப்பை போக்கும் வகையில், பி.சி.சி.ஐ சொந்தமாக விமானம் வாங்க வேண்டும் என்று, முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

இந்தியா அணீ , பல்வேறு போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது. அதற்காக, பொது விமானத்தில் அடிக்கடி சென்று வருவதால் அவர்கள் சோர்ந்து விடுகிறார்கள்.

பிசிசிஐக்கு செலவைக் குறைக்கும் வகையிலும், வீரர்கள் பயணத்தால் சோர்வடைவதை தடுக்கவும், தனி விமானம் ஒன்றை வாங்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

பல நாடுகளில் பிரபலமான விளையாட்டு அணிகள், சொந்தமாக சொகுசு கப்பல், விமானம் வைத்துள்ளன. சில விளையாட்டு வீரர்களும் தனியாக விமானம் வைத்துள்ளனர்.

‘உலகின் பணக்கார கிரிக்கெட் சங்கமான பிசிசிஐக்கு விமானம் வாங்குவது எல்லாம் சாதாரண விஷயம்’ என்கிறார் கபில்தேவ்.

“டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் பார்த்துள்ளோம்”. அடுத்ததாக, பிசிசிஐயின் ஏரோபிளேன் வாங்கும் நடவடிக்கையையும் பார்க்கலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்