குடிநீர் வசதிகளுக்காக நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு

(டினேஸ்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போரைதீவுப்பற்று  வெல்லாவெளி பிரதேச செயலத்தில் அண்மையில் கோடைகாலத்தில் குடிநீர் வசதியின்றி தவித்து வந்த மக்களுக்கான குடிநீர் வசதிகளுக்காக நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு நிகழ்வு இன்று 09 அமைப்பின் போரைதீவுப்பற்று அமைப்பாளர் பாலகப்போடி குமாரசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், கல்குடா தொகுதி அமைப்பாளர் குணராசா குணசேகரன் மற்றும் பிரதேச மக்கள் அடங்களாக பலரும் கலந்து கொண்டனர். அந்தவகையில் 10 கிராமங்களுக்குரிய குடிநீர்   வசதிகளுக்காக நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்