பம்பைமடு தூய இறையிரக்க திருத்தலத்திற்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தால் ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைப்பு…..

பம்பைமடு தூய இறையிரக்க திருத்தலத்திற்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தால் ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைப்பு……

வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டையை அண்மித்த பம்பைமடு தூய இறையிரக்க திருத்தலத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், முன்னைநாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017இற்கான நிதியிலிருந்து ஒலிபெருக்கி உபகரணத்தொகுதியொன்று கடந்த 18.08.2017 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னைநாள் அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம் மற்றும் அவரது இணைப்புச்செயலாளர் திரு.பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோர் குறித்த திருத்தலத்திற்கு நேரில் சென்று ள.திருத்தல பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய. ஜெஸ்லி ஜெகநாதன் மற்றும் நிர்வாகத்தினரிடம் வழங்கி வைத்தார்.

ஞவவுனியா, விபுலானந்தா கல்லூரியின் பிரதி அதிபரும், குறித்த திருத்தல அபிவிருத்தியில் முன்னின்று பங்குகொள்பவருமாகிய திரு.F.X.F.ரொசான் Fenin Roshan அவர்களினால் முன்னிலைப்படுத்தப்பட்ட கோரிக்கைக்கமைவாக இத்தொகுதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்