ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் ராணா

பாகுபலி-2 படத்திற்கு அப்பட டைரக்டர் ராஜமவுலி அடுத்து இயக்கும் படம் குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அப்பட நாயகனாக பிரபாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் சாஹோ படத்தில் நடிக்கிறார். ஆனால், அந்த படத்தில் வில்லனாக நடித்த ராணா ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

பாகுபலி-2 படத்திற்கு பிறகு ராணா நடிப்பில் வெளியான படம் நேனே ராஜூ நேனே மந்திரி. இந்த படம் பாகுபலி படங்களுக்குப்பிறகு ராணாவுக்கு ஹிட்டாக அமைந்தது. தெலுங்கில் வெளியாகி விட்ட அப்படம், நான் ஆணையிட்டால் – என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அடுத்தபடியாக ராணா நடிக்கும் ஹாலிவுட் படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதாவது, 1984ல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் உள்ள ஆழமான கடல் பகுதியில் மூழ்கிய ஒரு கப்பலை மையப்படுத்தி அந்த படத்தின் கதை உருவாகியுள்ளதாம். அந்த கதைக்கு விஜில் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ராணாவுடன் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகையர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்