உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி!

கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியூடாகப் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியூடாகக் களமிறக்கவுள்ள அபேட்சகர்களில் அதிகளவானோர் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சமுர்தி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தினூடாக சமுர்த்தி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்