சீ வீ க்கு துணை போவதாக சரத் பொன்சேகாவின் கருத்து இருக்கிறது — ஜனக பண்டார தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார்

வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனின் தேவைக்கேற்ற வகையிலேயே, பீல்ட் மார்ஷலும் அமைச்சருமான சரத் பொன்சேகா கருத்து வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தம்புள்ளையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தாம் 20 வருடங்கள் அரச தொழிலில் ஈடுப்பட்டிருந்த நிலையில், இவ்வாறானவர்களை சந்தித்ததில்லை
இதனை எண்ணி தாம் தலைக்குனிகின்றேன். இவ்வாறான விடயங்களை நிர்பந்திக்க வேண்டும் என மக்களை கோகின்றேன்” என கூறினார்.

இதேவேளை சிறப்பு தேவையுடைய இராணுவத்தினரால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சரத் பொன்சேகவுக்கு எதிராக அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்ட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்