வந்தாறுமூலையில் நவீன முறையில் கட்டப்பட்ட நூலகம் திறந்து வைப்பு

(வெல்லாவெளி  நிருபர் -க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு- வந்தாறுமூலை கிராமத்தில்  மாணவர்கள், பொதுமக்களின் நலன் கருதி நவீன முறையில் புனரமைக்கப்பட்ட நூலகம் கடந்த சனிக்கிழமை (9.9.2017)  பொதுமக்கள் பாவனைக்காக மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில்  திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், விவசாயத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர்கள் நாடா வெட்டி திறந்து வைப்பதையும் படத்தில் காணலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்