அடிமையாக சாரதியை பயன்படுத்திய பணிப்பாளர்; நீதிவேண்டிசாரதிமனிதஉரிமைநிலையத்தில் முறைப்பாடு

அராலியூர் குமாரசாமி

யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளுக்கு வாகன சாரதிகளாக பணியாற்றுபவர்கள் எல்லோருக்கும்சந்தோஷமாக பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும்  ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது. பலர் கவலை தோய்ந்த முகத்துடன் பணியாற்றுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவர்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகளை  வார்த்தைகளால் சொல்ல முடியாது. அலுவலக வேலைக்கு வாகன சாரதியாக நியமனம் வழங்கப்படுகிறது. பின்னர் அந்த அதிகாரியின் வீட்டுவேலைகளுக்கும்  உறவுகளை ஏற்றிச் செல்வதற்கும் தான் அதிக நாள்கள் சாரதியாக வேலை செய்ய வேண்டியிருப்பதாக புலம்புகின்றார்கள்.

யாழில் பணிப்பாளரின் வாகனத்துக்கு சாரதியாக நியமனம் பெற்று வந்ததில் இருந்து சாரதி ஒருவர் பணிப்பாளரின் வீட்டுத் தேவைக்கும் அவரின் உறவுகளின் தேவைக்கும் கூடுதலாக வாகனத்தை ஓடுவதால் பணிப்பாளருடன் அடிக்கடிமுரண்பட்டுக் கொண்டதால் சாரதி வேலையில் இருந்து தூக்கி எறியப்பட்டசம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக தனக்கு நீதிவேண்டியாழ். மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

பணிப்பாளரின் வாகன சாரதியாக வேலை செய்யும் காலம் தொடக்கம் அவரது பணிப்புரைக்கு அமையஅரசவாகனத்தை  வீட்டில் தரித்துவிட்டு பணிப்பாளரின் சொந்த வாகனங்களை மாறிமாறி ஓடுமாறு பணிப்பாளர் அவரை பணித்துள்ளார். அதாவது கார் வான் போன்ற பணிப்பாளரின் சொந்த வாகனங்களை அரசவேலைகளுக்கும் வீட்டுதேவைகளுக்கும் பயன்படுத்தினார்கள். தொடர்ந்து இந்தமுறைகேடான முறையில் வாகனங்களை ஓடமாட்டேன். அரச வாகனத்தை மட்டுமே ஓடுவேன் என்று பணிப்பாளருக்கு கூறியுள்ளார். கோபமடைந்த பணிப்பாளர் தனது சொந்த வாகனத்தை ஓடாவிட்டால் உன்னை வேலையில் இருந்து நிற்பாட்டுவேன் என்று சொல்லி இருக்கிறார். சாரதி பணிப்பாளரின் சொந்த வாகனத்தை ஓட மாட்டேன் என்று சொன்னதும் சாரதி மீது பணிப்பாளர் ஒருகண் வைத்திருந்தார்.

24-05-2017அன்று அலுவலகத்தில் இவர் இருக்கும் போது பிற்பகல் 2.30 மணிக்கு தனது வீட்டுக்கு வாகனத்தை கொண்டு வருமாறு பணிப்பாளர் பணித்துள்ளார். அவ்வாறே கொக்குவிலில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற சாரதி பணிப்பாளரையும் மற்றும் அவரது கணவரின் தம்பிமனைவி மற்றும் இரு பிள்ளைகளையும் ஏற்றிக் கொண்டு நல்லூரில் உள்ள றியோ ஜஸ்கிறீம் கடைக்கு சென்று பின்னர் திருநெல்வேலிக்கு செல்லுமாறு கூறினார்கள். அவர்கள் அனைவரையும் பின்னேரம் 4.30 மணிக்கு இறக்கி வரும் வேளை பாதை திருத்துவதற்காக கல்லு பறித்திருந்தார்கள் மாற்று வழியாக காங்கேசன்துறை வீதிவழியாக அலுவலகம் வரும் போது ஆஸ்பத்திரி வீதி வழியாக அலுவலகம் திரும்பும் போது மினிபஸ்   இவர் ஓடிவந்த வாகனத்தின் பின் பக்க வலது பக்க சிக்னல் லைட்டை பின்னால் இடித்து உடைத்துவிட்டது.

பின்னர் பொலிஸாருக்கு அறிவித்து அவர்கள் வந்து பார்த்த போது பொலிஸாருக்கு பணிப்பாளரின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்துள்ளார். பணிப்பாளரே பொலிஸாரிடம் பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார். பணிப்பாளர் விடுமுறையில் நிற்பதை அப்பொழுதுதான் இவர்அறிந்துள்ளார்.மினிபஸ் சாரதியையும் உரிமையாளரையும் அழைத்துக் கொண்டு பணிப்பாளரின் வீட்டுக்குச் சென்றார். அங்கே மினிபஸ் உரிமையாளர் 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு தருவதாகக் கூறினார். உடனே அவரது வீட்டுக்குச் சென்றார் நஷ்டஈடான 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மினிபஸ் சாhதியின் பிழை என்பதை கடிதம் மூலம் எழுதியும் கொடுத்துள்ளார்கள்.

மறுநாள் காலையில் வழமைபோல் பணிப்பாளரை ஏற்றிவரும் போது மீதிப் பணத்தை செலுத்தி வாகனத்தின் சிக்னலை சீர்செய்யுமாறு இவரை பணிப்பாளர் பணித்துள்ளார். கொழும்பு மற்றும் யாழ்ப்பாண முகவர்களிடம் சிக்னலைப் பெற முயன்றும் இவரால் முடியாமல் போனது. இந்த விடயத்தை பணிப்பாளரிடம் சொல்லியும் சிக்னலை சீர்செய்யுமாறு இவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். முடியாமல் போக வாகன டிங்கர் வேலைக்கு 5 ஆயிரம் ரூபாய் போக மீதி 15 ஆயிரம் ரூபாவை பணிப்பாளரின் பணிப்பின் பெயரில்கடிதம் மூலம் எழுதி அலுவலக உத்தியோகத்தரிடம் கொடுத்துள்ளார்.

9-6-2017  ஒரு கடிதம் இவருக்கு வந்தது. அந்தக் கடிதத்தில் 8-6-2017 அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 4.30 மணிவரை கடமையில் இவர் இல்லை எனவும் அதற்கான விளக்கம் கோருமாறும் கோரியிருந்தது. ஆனால் அன்று காலை 8.30 மணிக்கு  திறப்பை எடுத்து வந்து கதவைத் திறக்குமாறு பணிப்பாளர் சாரதியிடம் கூறினார். பின்னர் முற்பகல் 11.30 மணிக்கு அலுவலகம் மூடப்பட்டது. பணிப்பாளர் அலுவலகத்தில் இல்லாமல் இருந்து கொண்டு சாரதிக்கு விளக்க கடிதம் கோரியுள்ளார். அன்றைய நாள் விடுமுறை நாளாகும்.

31.8.2015 இலிருந்து 9.6.2017 வரை சாரதி மீது எவ்வித குற்றச்சாட்டுக்களோ எச்சரிக்கைகளோ செய்யப்படவில்லை. 8.6.2017 சம்பவத்தின் 9.6.2017 விளக்கம் கோரல் கடிதத்திற்கு இவர்விளக்கம் கொடுத்த பின்பு தான் பணிப்பாளர் இவர்மீது கோபம் கொள்ளத் தொடங்கினார். வாகன ஓட்டப்புத்தகம் மாதம் ஒருமுறை தந்து பணிப்பாளர் கூறுவதை மட்டும் வாகன ஓட்டப் புத்தகத்தில் பதிந்துவிட திரும்பவும் வாகன ஓட்டப் புத்தகத்தை பணிப்பாளர் வாங்கிவிடுவார் என்று சொல்கிறார்.28-6-2017 அன்று முற்பகல் 10 மணிக்கு பணிப்பாளரின் பணிப்பின் பெயரில் அலுவலக உத்தியோகத்தர் மற்றும் அலுவலக பணியாளருடன்   100 தேசிக் கன்றுகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பணிப்பாளரின் வீட்டில் கொண்டு சென்று இறக்கிவிட்டு வந்துள்ளார்.

31-08-2015 திகதிய 2-1-1-2 சாரதி இலக்க கடிதத்தின் பிரகாரம் நியமனஅதிகாரியினால் வழங்கப்பட்ட அமைய சாரதி நியமனம் கமத்தொழில் அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் 1-9-2015 கடமையைப் பொறுப்பேற்று கடமையை சீராக செய்து வந்தார். 26.7.2017 வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக இன்னும் ஆக்கபூர்வமான தகவல் இல்லை. சாரதிக்கு எந்தவிதமான அறிவித்தலும்  வழங்காமல்  விரல் அடையாள வரவு இயந்திர பதிவேட்டில் இருந்து சாரதியின் பெயரை நீக்கியுள்ளார். அறிவித்தல் எதுவும் வராததால் வரவுப் பதிவேட்டில் தொடர்கையொப்பமிட்டு வருகிறார்.முன்னறிவிப்பின்றி கடந்த மாதத்தில் இருந்து சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. 24-7-2017 கடிதத்தின் பிரகாரம் மாவட்டச்செயலகத்தில் விரல் அடையாள இயந்திரத்தில் வரவு பதிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நியமனம் கிடைத்ததில் இருந்து வேலையில் இருந்து தூக்கிஎறியப்படும் வரை தன்னை துன்புறுத்தியதாக இவர் தெரிவித்துள்ளார். பணிப்பாளரின் சொந்த வாகனங்களையும் உச்சிவெயில் என்று பாராமல் தன்னை கழுவுமாறு உத்தரவிடுவார். வேலை போய்விடும் என்ற காரணத்தால் தான் கழுவி வந்ததாகவும் வெளிநாடுகளில் இருந்து வரும் பணிப்பாளரின் உறவுகளை ஏற்றுவதற்காக விடுமுறையை எடுத்து பணிப்பாளரின் சொந்த வாகனத்தில் செல்லுமாறு பணிப்பதாகவும் கண்டியில்  சேர்விஸ் செய்ய சொல்வார். திரும்பி வந்ததும் அரச வாகனத்துக்கு ஓட்டப்பதிவேடு பதியுமாறு நிர்ப்பந்திப்பார்.

அரச வாகனத்தை பாவித்ததாக எழுதச் சொல்லுவார். 19.10.2016 அன்று வாகனத்திற்கு பரிசோதனை அதிகாரிகளால் டீசல் அளவு கணிப்பிடப்பட்டது. 11 கிலோமீற்றர் வேலை செய்கிறது என்ன மாதிரி என்று என்னிடம் கேட்டார்கள் நான் அவ்வாறே போடுமாறு கோரினேன் ஆனால் பணிப்பாளர் 7 கிலோமீற்றர் போடுமாறு நிர்ப்பந்தித்தார். இன்றுவரை 7 கிலோமீற்றர் வேலை செய்வதாக காட்டப்படுகிறது. பல தடவைகள் வாகனத்துக்கு டீசல் நிரப்பியதாக டீசல் நிரப்பாமல் பில் எடுக்கப்பட்டுள்ளன.என்று பணிப்பாளர்  மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்