அரசுக்கு சீ.வி. ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: அஸ்கிரிய பீடாதிபதி கோரிக்கை

மாகாணசபைகளின் அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களுக்கு மாகாண அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என அஸ்கிரிய பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், அஸ்கிரிய பீடாதிபதியை கண்டி அஸ்கிரிய மல்வத்த பீடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்திருந்தார். இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் அஸ்கிரிய பீடத்தின் சிரேஸ்ட பீடாதிபதிகள் பலர் இணைந்து கொண்டிருந்தனர்.

மேலும், அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரருடனான சந்திப்பு, நல்ல ஒரு பயணத்தின் ஆரம்பமாக இருக்கும் என தாம் நம்புவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்