இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு முன்னாள் நட்சத்திர வீரரை நாடும் கிரிக்கெட் சபை

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு அவருக்கு வழங்கப்படவுள்ள நிலையில் அப்போட்டிகளின் பயிற்றுவிப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும், அரவிந்தவுக்குக் கீழ் பணியாற்றும்படி செய்யப்படவுள்ளது.

முதற்கட்டமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணி, இவருக்கு ஒப்படைக்கப்படவுள்ளதோடு இவர் ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராகவும் பின்னர் அணியின் வழிகாட்டுநராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்