சங்கீதா இளைய தளபதி லவ் ஸ்டோரி தெரியுமா உங்களுக்கு

தமிழ் சினிமா வரலாறுல ever green ஹீரோனாலே அது நம்ம இளைய தளபதி விஜய்தாங்க. அந்த அளவுக்கு அப்போலேந்து இப்போவரைக்கும் தன்னோட இளமையும், துடிப்பும் கொஞ்சம் கூட குறையாமல் நடிச்சுட்டு இருக்காரு. அதனாலதான் தளபதிக்கு இவ்ளோ பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கு.

இப்படி எல்லார் இதயத்தையும் கவர்ந்த நம்ம தளபதி இதயத்தை அவரது மனைவி சங்கீதா எப்படி கவர்ந்தாருனு தெரியுமா? வாங்க பாப்போம்.

பூவே உனக்காக படம் வெளிவந்த போது அந்த படத்தை லண்டன்ல பார்த்த நம்ம சங்கீதா தளபதிய ரொம்ப பிடிச்சு போய் அவரை பார்க்க உடனே இங்க தமிழ் நாட்டுக்கு வந்திருக்காங்க.

சென்னைக்கு வந்த சங்கீதா தளபதியோட ரசிகையா அறிமுகமாகி பிறகு அடிக்கடி தளபதியோட பேசி சீக்கிரமே அவரோட நல்ல தோழியா ஆகிடாங்கலாம்.

 

அந்த சமயத்துல தளபதி காலமெல்லாம் காத்திருப்பேன் படத்துல நடிச்சுட்டு இருந்தார். அப்போ லண்டன்லேந்து சென்னை வந்த சங்கீதாவை தளபதி தன் வீட்டிற்கு விருந்திற்காக அழைத்து தன் பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். சங்கீதாவிற்கு விருந்தளித்த தளபதியின் பெற்றோர்களுக்கு அவரை ரொம்பவே பிடிச்சு போயிருச்சாம்.

 

கொஞ்ச நாளிலேயே இவர்கள் நட்பு காதலாக மலர்ந்ததால் பெற்றோர்கள் சம்மதத்துடன் 25 ஆகஸ்ட் 1999ல் இவர்கள் திருமணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

தற்போது சஞ்சய், திவ்யா என்னும் இரண்டு குழந்தைகளுடன் இன்றும் காதலுடன் தளபதியும் சங்கீதாவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்