அனைத்து போட்டிகளுக்குமான அணித்தலைவராகிறார் டு பிளஸிஸ்

தென் ஆபிரிக்காவின் அனைத்து வடிவ கிரிக்கட் போட்டிகளுக்கும் அணித்தலைவராக டு பிளஸிஸ் நியமிக்கப்படவுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரி-ருவென்ரி அணித்தலைமைய ஏற்றுக் கொண்ட டு பிளஸிஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் டெஸ்ட் அணித்தலைமை ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருடன் தென் ஆபிரிக்க அணியின் ஒருநாள் போட்டி அணித்தலைமையையும் டு பிளஸிஸ் ஏற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாத இறுதியில் தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான தொடரில் ஒருநாள், ரி-ருவென்ரி- டெஸ்ட் போட்டிகளுக்கான தென் ஆபிரிக்க அணித்தலைவராக டு பிளஸிஸ் முதன்முதலில் செயற்படவுள்ளார்.

இந்த தொடரில் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடர் ஆகியன நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்