போலீஸாரின் வாகனத்தை கடத்திக்கொண்டு ஓடிய பெண்!!: விரட்டிப் பிடித்த பரபரப்புக் காட்சி

டெக்ஸாஸை சேர்ந்த 33 வயதான டோஸ்ச்சா ஸ்பான்ஸ்லர் என்ற பெண், கடைத்திருட்டில் கைதானார். அவருடைய பையை போலீஸார் சோதனையிடும் நேரம் பார்த்து… …அவர் தன்னுடைய இருக்கை பெல்டையும், கைவிலங்கையும் லாவகமாக அகற்றினார்.
பின்னர், போலீஸ் வாகனத்தில் ஓட்டுநர் இருக்கைக்குத் தாவி, அதை ஓட்டிக்கொண்டு தப்ப முயன்றார் மணிக்கு 100 மைல் வேகம் வரை சென்ற அந்தக் காரை 23 நிமிடங்கள் போலீஸார் துரத்தினர். இறுதியில், ஸ்பான்ஸ்லர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்தது.
காரில் இருந்த கைத்துப்பாக்கியை எடுக்க ஸ்பான்ஸ்லர் முயல்வதை கண்ட போலீஸார் சுதாரித்துக் கொண்டனர். ஸ்பான்ஸ்லர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வலியுறுத்தவில்லை. எனவே, வட்டார சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸார் அந்தக் காரில் புதிய தடுப்பை பொருத்தியிருக்கிறார்கள்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்