பலாத்கார சாமியார் படுக்கை அறைக்கு பெண்கள் வந்து போக சுரங்கப்பாதை.!பரபரப்பு தகவல்.!

தேரா சச்சா ஆசிரமத்தில் ராம் ரஹிம் அறையில் இருந்து பெண் சீடர்கள் தங்கி உள்ள இடத்துக்கு சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹீம் பெண் சீடர்களை பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இதனையடுத்து குர்மீத் ராம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தேரா சச்சா ஆசிரமத்தை அதிகாரிகள் சோதனை இட்டு வருகின்றனர். அதில் ரொக்கப்பணம், ஏராளமான கணக்கில் காட்டப்படாத விலையுயர்ந்த பொருட்கள், மற்றும் பல ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதனையடுத்து நேற்று நடந்த சோதனையில் குர்மீத் ராம்ரஹீமின் அறையில் ஒரு சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த சுரங்கப்பாதை சாமியாரின் அறையிலிருந்து பெண் சீடர்கள் தங்கும் விடுதி வரை செல்கிறது.
அதன் மூலம் பெண் சீடர்களை தனது அறைக்கு அழைத்து வந்து சாமியார் உல்லாசம் அனுபவித்திருக்கலாம் என சந்தேகபடுவதாக சோதனை குழுவினரால் சொல்லபடுகிறது. மேலும் ஆசிரமத்தினுள் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் ரகசியமாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயனங்களை சோதனை செய்ததில் அவை பயங்கரமான வெடி பொருட்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால்அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். சோதனை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்