முதலமைச்சரின் ரூ 62 இலட்சம் செலவில் காத்தான்குடி சாவியா மகளிர் வித்தியாலத்துக்கு புதிய மாடி கட்டிடம்

​கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் கோரிக்கைக்கு அமைவாக
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களின் 62 இலட்ச நிதியொதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி சாவியா மகளிர் பாடசாலைக்கான மாடிக்கட்டிடம் இன்று காலை திறந்து வைத்து கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் நயிமா அப்துஸ்ஸலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கி.மா சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கி.மா.சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோருடன் அதிகாரிகள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பொதுமக்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்