112 பேரில் 5 பேர் மட்டுமே தமிழ் பேசும் அதிபர்கள்!

கல்வி நிர்வாக சேவை வகுப்பு 3 இற்கு, திறமை மற்றும் சேவை மூப்பு அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாகியுள்ளவர்களது பெயர்ப் பட்டியல் விபரத்தினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

118 வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட குறித்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள 112 அதிபர்களில், தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த 5 பேர் உள்ளடங்குகின்றனர்.

இவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகள் விரைவில் நடைபெறும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்