‘இர்மா’ புயலால் 9,000 கனேடியர்கள் பாதிப்பு!

புளோரிடா  மற்றும் கரிபீயன்தீவுகளை புரட்டி போட்ட ‘இர்மா’ புயலால் குறைந்து 9,000 கனேடியர்கள் பாதிப்படைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் குறைந்தது 265 பேர் தூதரக உதவிகளை நாடியுள்ளதாகவும் அவர்களுக்கான தேவைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலாளர் ஒமார் அல்காப்ரா, ”புயல் நகர்ந்துசெல்லும் பாதையில் பெருமளவு கனேடியர் சிக்குண்டுள்ளதாகவும், அவர்களைத் தொடர்பு கொள்வதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் முடிந்த அளவு முயற்சிகளை தமது குழுவினர் மேற்கொண்டு  வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்