பிரெக்சிற் – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான முயற்சியில், பிரெக்சிற்றுக்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரெக்சிற்றுக்கான சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இரண்டாம் கட்ட வாசிப்பைத் தொடர்ந்து அரசியல், நிதி மற்றும் சட்ட உறவுகள் தொடர்பான சட்டமூலத்துக்கு ஆதரவாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பின் மூலம், நாடாளுமன்ற நடைமுறையில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வழிவகுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறிருக்க, நாடாளுமன்றத்தில் நேற்று சுமார் 8 மணித்தியாலமாக நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான சட்டமூலத்துக்கு 290 முதல் 326 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதற்கிடையில், புதிய அதிகாரங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவாதமளிக்க அமைச்சர்கள் முயன்றுள்ளனர்.

மேலும், இன்றையதினம் காலை நடைபெற்ற வாக்கெடுப்புக்கு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தச் சட்டமூலமானது நிச்சயமானது என்பதுடன், தெளிவானதாகவும் காணப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமரியாதைக்கு உட்படுத்துகின்றது என தொழிலாளர் கட்சி விமர்சித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்குத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, இதற்கான வாக்கெடுப்பு கடந்த வருடம் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவாக அதிகளவான வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்