ஐ.நா.வின் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை: அரசாங்கம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கு அரசாங்கம் முழுமூச்சுடன் செயற்பட்டு வருவதாகவும், அவ்வாறான சூழ்நிலையில் ஐ.நா. முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய அதன் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதுகுறித்து தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த போதே கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், சகல பிரச்சினைகளையும் தீர்க்க மேலும் கால அவகாசம் அவசியமென கூறியுள்ளார்.

அத்தோடு, இப்பிரச்சினைகளை பொறுமையாகவே தீர்க்க முடியுமென்றும், ஐ.நா. ஆணையாளரின் அவசரத்திற்கு எதுவும் செய்ய முடியாதென்றும் அமைச்சர் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்