கொழும்பில் அதிகாரங்களை குவித்து வைத்தால் நாடு ஒன்றுபடுமா?

அதிகாரப் பகிர்வானது நாட்டை பிரிவினைக்கே இட்டுச் செல்லும் என்றும், மத்தியில் அதிகாரங்களை வைத்திருப்பதே நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

போர்க்காலத்தில் சுமார் 25 வருடங்களை தான் வடக்கு கிழக்கில் கழித்தவர் என்ற வகையில், அம் மக்களுக்கு என்ன அவசியம் என்று தனக்கு நன்கு தெரியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், அம் மக்களுக்கு அதிகாரப் பகிர்வோ தனிநாடோ தேவையில்லையென குறிப்பிட்டுள்ள கமால் குணரத்ன, அமைதியான வாழ்க்கையையே அம் மக்கள் விரும்புகின்றனர் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்