கார் டயர் வெடித்து விபத்து… உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா !!

கார் டயர் வெடித்து விபத்து… உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா

கார் டயர் திடீரென வெடித்த விபத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய போதிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் நீண்ட நாட்களாக தவித்து வருகிறார்.

இந்நிலையில் நாளை துவங்க உள்ள துலிப் டிராபியில் சுரேஷ் ரெய்னா பங்கேற்று விளையாட உள்ளார்.

இதற்காக காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு சுரேஷ் ரெய்னா தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது நேற்று நள்ளிரவு 2 மணியளவில் காரின் டயர் திடீரென வெடித்துள்ளது. இந்த விபத்தில் இருந்து ரெய்னா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மாற்று டயர் இல்லாமல் நள்ளிரவில் நடுரோட்டில் காத்திருந்த சுரேஷ் ரெய்னா அப்பகுதி காவல்த்துறையினர் உதவி மூலம் கான்பூர் வந்தடைந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்