பிரித்தானியாவில் பயங்கர வெடி சத்துடன் பற்றி எரிந்த வீடு: இரத்தம் சொட்டிய நிலையில் கையை இழந்த நபர்

பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்று பயங்கர வெடி சத்ததுடன் பற்றி எரிந்ததில் வீட்டின் உள்ளே இருந்த நபர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Liverpool பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு அருகில் இருந்த வீடு ஒன்றில் பயங்கர வெடிசத்ததுடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் வீட்டில் இருந்த நபர்களை மீட்டுள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த நபர் ஒருவர் பயங்கர காயங்களுடன் இரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் வீட்டில் இருந்த பெண் மற்றும் இளைஞர் ஒருவர் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து அந்த வீதியில் இருந்த 19 வயது மாணவன் கூறுகையில், திடீரென்று பயங்கரமாக வெடி சத்தம் கேட்டதாகவும், சுமார் 10 விநாடிகள் இந்த சத்தம் கேட்டதாகவும், அதன் பின் வீட்டின் வெளியில் வந்து பார்த்த போது, பாதிப்புக்குள்ளான வீடு பயங்கரமாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாகவும், அப்போது வீட்டில் இருந்த நபர் ஒருவர் கையை இழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த மாணவன் வீட்டில் பட்டாசுகள் இருந்திருக்கலாம் எனவும், அதனால் தான் இந்த சத்தம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், இது தொடர்பான தகவல் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு தான் தெரிவிக்கப்பட்டதாகவும், தகவல் வந்தவுடன், உடனடியாக தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்