பிக்பாஸ் வீட்டில் யார் உண்மையான நம்பிக்கை துரோகி..! வெளியானது உண்மையான முகம்…!!

பிக்பாஸ் வீட்டில் யார் உண்மையான நம்பிக்கை துரோகி..! வெளியானது உண்மையான முகம்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது பரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றைய ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பிக்பாஸ் வீட்டின் வெளியே இருந்து காம்பவுண்ட் சுவரை தாண்டி துணி பந்துகள் உள்ளே வந்து விழுகின்றன.

இதனை சேகரிக்கும் போட்டியாளர்கள் கர்ச்சீப் சைசில் இருக்கும் அந்த துணைகளை இணைத்து பெட்ஷீட் போல தைக்க வேண்டும்.

இந்த துணி பந்துகளை அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டு கொண்டு எடுக்கின்றனர்.

அவ்வாறு எடுக்கும்போது கணேஷ் நடைபாதையில் வழுக்கி கீழே விழுந்து விடுகிறார். முதுகு தண்டுவடமே முறிந்து விடும் அளவுக்கு விழுந்து விடுகிறார்.

ஆனால் இதனை யாருமே கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

ஆனால் சுஜா மட்டும் பதறி அடித்து கொண்டு ஓடி வருகிறார்.

நேற்றைய நிகழ்ச்சியில் யார் உண்மையான நம்பிக்கை துரோகி, வெற்றிக்காக முதுகில் குத்துவார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அனைவருமே சுஜாவைதான் சொல்கின்றனர்.

ஆனால் அந்த சுஜாதான் கணேஷ் கீழே விழுந்தவுடன் உதவ ஓடி வருகிறார். மற்றவர்கள் யாரும் வரவில்லை.

இதில் இருந்தே யார் உண்மையான நம்பிக்கை துரோகி என்பது கணேசுக்கு மட்டும் அல்ல மற்ற போட்டியார்களுக்கும் தெரிய வந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்