புதுமணப்பெண்ணை கதற கதற உயிரோடு எரித்து கொன்ற மாப்பிள்ளை வீட்டார் : இதயத்தை உறைய வைக்கும் காரணம்..!!

இந்தியாவின் பெங்களூர் நகரில், சவுகான் எனும் நபர், இரண்டாயிரம் ரூபா பணத்திற்காக தனது மனைவியை எரித்துக்கொலை செய்துள்ளார்.

கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த சவுகான் பூஜா தம்பதியினருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் தான் திருமணமாகியுள்ளது.

திருமணமான நாளில் இருந்தே இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற ஆண்டு, வீட்டில் இருந்த இரண்டாயிரம் ரூபாயினை காணவில்லை என்று தனது மனைவியுடன் சவுகான் சண்டை நடந்துள்ளது.

மாமியாரும் பூஜாவிடம், நீ தான் பணத்தை எடுத்துள்ளாய் என்று கூறியுள்ளார். பிரச்னை அதிகமாகவே கணவரும், மாமியாரும் சேர்ந்து பூஜாவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்.

பூஜாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பூஜாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பூஜாவின் கணவரும், மாமியாரும் தலைமறைவாகியுள்ளனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்