மனைவிக்கு குடிக்கும் தண்ணீரில் ஆசிட் கலந்து கொடுத்த கணவன்.! நடந்தது என்ன.!

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த தம்பதி ஜாவித், பஷீனா. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பஷீனாவிடம் மாப்பிள்ளை வீட்டார் ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர்.

தொடர்ந்து பலமுறை வரதட்சணை கேட்டு அவரை கொடுமை செய்தனர். இதனையடுத்து பஷீனா சாப்பிட்டு கொண்டிருக்கும்போது தனது கணவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பிறகு கணவர் கொடுத்த தண்ணீரை குடித்த பஷீனா ரத்த, ரத்தமாக வாந்தி எடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பஷீனாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவருக்கு எந்தவித உதவியையும் செய்யாமல் இருந்துள்ளனர் இதனால் அருகிலிருந்த பஷீனாவின் உறவினர்கள் அவர மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் பஷீனா சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தண்ணீரில் ஆசிட் கலந்து கொடுக்கபட்டுள்ளதாக கூறினர். இதனால் அவரது உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிவித்தனர் இது தொடர்பாக பஷீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்