ஒட்டுமொத்த குடும்பத்தையும் அடிமையாக்கிய ப்ளு வேல் கேம்.. இது தமிழ்நாட்டில் தான் !!

கோவையை சேர்ந்த ஒரு குடும்பமே ப்ளூ வேல் கேமுக்கு அடிமையாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த ஒரு குடும்பம் ஒட்டுமொத்தமாக ப்ளூ வேல் கேமுக்கு அடிமையாகி இருப்பதை கோவை சைபர் செல் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த விபரீத விளையாட்டை வேடிக்கையாக இந்த குடும்பம் விளையாடத்தொடங்கியுள்ளது. மேலும் அதில் வரும் பல சவால்களை அவர்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்டுபிடித்த கோவை சைபர் செல் அதிகாரிகள், அந்த குடும்பத்தை அழைத்து எச்சரித்துள்ளனர். அதிகாரிகள் சொல்லும் அறிவுரைகளை முதலில் அவர்கள் ஏற்கவில்லை .

இதனால் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதன் பிறகே ப்ளூ வேல் கேம் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதாக அவர்கள் கூறினார்.
அந்த குடும்பத்தினரை அதிகாரிகள் வீடுக்கு அனுப்பி வைத்தாலும் , தொடர்ந்து அவர்களை கண்கானித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்