வருகைபதிவின் போது ‘ஜெய்ஹிந்த்’:ம.பி., பள்ளிகளில் விரைவில் அமல்

போபால் : அரசு பள்ளிகளில் வருகைபதிவின் போது மாணவர்கள், ‘யெஸ் சார் – யெஸ் மேடம்’ என கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என மத்திய பிரதேச மாநில கல்வி அமைச்சர் விஜய் ஷா உத்தரவிட்டுள்ளார். வருகைபதிவின் போது அனைத்து மாணவர்களும் ஜெய்ஹிந்த் சொல்ல அவர்களை பழக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். முதல்கட்டமாக சாட்னா மாவட்ட பள்ளிகளில் அக்டோபர் 1ம் தேதி முதல், இது நடைமுறைக்கு வர உள்ளது. பிற மாவட்டங்களில் படிப்படியாக கொண்டு வரப்படும் எனவும் விஜய் ஷா தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என ம.பி., அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளும் இதனை கடைபிடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களிடம் சிறுவயதில் இருந்தே தேச பக்தியை வளர்க்கும் நோக்கில் இந்த புதிய முறை கொண்டு வரப்பட உள்ளதாக விஜய் ஷா கூறி உள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்