மின்சார வாகனங்கள் தயாரிக்க நிறுவனங்கள்… விரைவில் புதிய ஆட்டோமொபைல் கொள்கை

புதுடில்லி: ‘வரும், 2030க்குள் நாடு முழுவதும், மின்சார வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும்’ என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இது தொடர்பாக, புதிய ஆட்டோமொபைல் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

 மின்சார கார்,Electric car, நிதின் கட்கரி,Nitin Gadkari,  ஆட்டோமொபைல்,automobile,  மத்திய அரசு ,central government, பெட்ரோல்,Petrol,  டீசல் ,Diesel,  சுற்றுச்சூழல்,environmental, இ - ஆட்டோ, E-Auto, பேட்டரி,Battery,  மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரி,Central Road Transport Minister Nitin Gadkari, புதுடில்லி,New Delhi,  மின்சாரம்,Electricity,

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் இறக்குமதியை குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், மின்சாரத்தால் இயங்கும் பேட்டரி வாகனங்களை இயக்குவதற்கு, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வரும், 2030ம் ஆண்டுக்குள், மின்சாரத்தை பயன்படுத்தும் வாகனங்களை மட்டுமே இயக்குவதற்கு இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி, அனைத்து வாகனத் தயாரிப்பாளர்களும், மின்சாரம் அல்லது மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனத் தயாரிப்புக்கு தயாராக வேண்டும்.

இதில் எந்த சமரசமும் கிடையாது அல்லது அரசின் கொள்கை உங்களை கட்டுப் படுத்துவதாக அமைந்து விடும் என, சமீபத்தில் எச்சரித்திருந்தார். இதைஅடுத்து, இதுவரை மந்த கதியில் இருந்த மின்சார வாகன தயாரிப்பு

நிறுவனங்கள் இடையே, தற்போது சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. மின் வாகனங்களை தயாரிப்பது குறித்த தீவிர ஆலோசனைகளில் அவை ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, மின்சார வாகனம் உள்ளிட்டவை அடங்கிய புதிய ஆட்டோமொபைல் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் அது வெளியிடப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களின் உயரதிகாரிகள் கூறியதாவது: மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான உயர் தர பேட்டரிகளை தயாரிக்கும் பணி, நம் நாட்டில் இதுவரை துவங்கவில்லை. வெளிநாட்டில் இருந்தே வாங்க வேண்டியுள்ளதால், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் விலை, சற்று அதிகமாகவே இருக்கும். இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கான வசதிகளை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய ஆட்டோமொபைல் கொள்கை வந்த பின், இதில் ஒரு தெளிவு ஏற்படும். மின்சார வாகனங்களை இயக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.அதனால்,தற்போது,’ஹைபிரிட்’ எனப்படும், இரண்டு வகை எரிபொருள்களில் இயங்கும் இன்ஜின்கள் உடைய வாகனத் தயாரிப்புகளுக்கு பதிலாக, மின்சாரத்தில் இயங்கக் கூடிய இன்ஜின்களை தயாரிப்பது குறித்தும், ஏற்கனவே உள்ள இன்ஜின்களை, மின்சாரத்திலும் பயன்படுத்தும் வகையில் மாற்றுவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

மத்திய அமைச்சர் கட்கரியின் எச்சரிக்கை, ஆட்டோமொபைல் துறையில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பல மாற்றங்களை சந்திக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘கைனடிக் கிரீன்’ நிறுவனம், ‘ஸ்மார்ட் – இ’ என்ற நிறுவனத்துடன் இணைந்து, மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர ஆட்டோக்களை தயாரித்து வருகிறது. அடுத்த, 18 மாதங்களுக் குள், 10 ஆயிரம் இ – ஆட்டோக்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு, 500 ஆட்டோக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

படையெடுக்கும் மின் கார்கள்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தான், மின்சாரத்தில் இயங்கும் முதல் காரை
அறிமுகம் செய்தது. பல்வேறு நிறுவனங்களும், மின்சாரத்தில் இயங்கும் கார்களை, வரும், 2018ல் இருந்து அடுத்தடுத்து அறிமுகம் செய்ய உள்ளன.டாடா நிறுவனம், ‘டியாகோ’ என்ற காரை அறிமுகம் செய்ய உள்ளது. மஹிந்திரா நிறுவனமும் புதிய ரக மின்சார கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய், 2019ல், தன் முதல் மின்சார காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம், ஜப்பானின் டொயட்டோ, சுசுகி ஆகியவையும், மத்திய அரசின் திட்டத்துக்கு துணையிருப்பதாக கூறியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்