பதுங்கு குழிகள் வேண்டும்!: எல்லையோர மக்கள் கோரிக்கை

ரஜோரி: ஜம்மு – காஷ்மீர் எல்லையோர கிராமங்களில், பாக்., தாக்குதலால் வீடுகளை இழந்து, முகாம்களாக மாற்றப்பட்ட பள்ளிகளில் தங்கியுள்ள அப்பகுதி மக்கள், தங்களுக்கென, பதுங்கு குழிகள் அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்

அத்துமீறி தாக்குதல்:

ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ரஜோரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில், பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பலர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து, அருகில் உள்ள பள்ளிகளில், முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கோரிக்கை:

எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களிடம், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், குறைகளை கேட்டறிந்தார்.அப்போது, தங்களுக் கென, தனிப்பட்ட பதுங்கு குழிகள் அமைத்து தரும்படி, முகாம்களில் வசிப்போர், கோரிக்கை விடுத்தனர்.

அவசியம்:

முகாம்களில் தங்கி உள்ளவர்களில் ஒருவரான, பிரஷ்தோம் குமார், நிருபர்களிடம் கூறுகையில், ”எல்லையோரம் அமைந்துள்ள வீடுகளில், ஒவ்வொரு வீட்டுக்கும், தனிப்பட்ட முறையில், பதுங்கு குழிகள் அமைத்து தரப்பட வேண்டும். ”உணவை விட, பதுங்கு குழிகளே எங்களுக்கு அவசியமாக உள்ளது,” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்