பெண் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி… வைரலாகும் புகைப்படம் உள்ளே !!

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி பெண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ’சூப்பர் டீலக்ஸ்’
இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு சமந்தா ஜோடியாக நடித்து வருகின்றார். ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வந்த இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் பி.எஸ்.வினோத். இதில் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது அக்கதாபாத்திரத்தின் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்