உண்மையில் ஜூலிக்கு நகைக்கடையில் நடந்தது என்ன? அவர் எதை மறைக்கிறார்…!!

உண்மையில் ஜூலிக்கு நகைக்கடையில் நடந்தது என்ன? அவர் எதை மறைக்கிறார்…!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளி என்ற அடைமொழியுடன் ஜூலி கலந்து கொண்டார்.
எனவே அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் அவர் மீது மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
எனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளியேறிய பிறகு வெளியில் எங்கு சென்றாலும் மக்கள் துரத்தியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு மீண்டும் பிக்பாசில் ரீஎன்ட்ரி கொடுத்தபோது அவரிடம் சுஜா மக்கள் துரத்தியது குறித்து கேட்டார்.
அதற்கு ஜூலி கூறும்போது, நான் ஒருநாள் நகை கடைக்கு சென்றிருந்தேன். அப்போது என்னை பார்க்க 300க்கும் மேற்பட்டோர் கூடி விட்டனர். எல்லோரும் என்னுடன் போட்டோ எடுத்து கொண்டனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று ஜூஸ் கொடுத்து உபசரித்தனர் என்று கூறினார்.
ஆனால் இதனை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். 300க்கும் மேற்பட்டோர் கூடியவர்களில் யாருமே போட்டோ எடுக்கவில்லையா.
அப்படி எடுத்து இருந்தாலும் இதுவரை ஒருவர் கூடவா நெட்டிவில் வெளியிடவில்லை என்று கேட்கின்றனர்.
ஒரு வேளை அப்படி கூடியிருந்தால், அவர்களை பயத்தில் ஜூலி ஓடி ஒளிந்திருப்பார் என கூறுகின்றனர். என்ன நடந்திருக்கும் என்பது பார்த்தவர்களுக்குதான் தெரியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்