உலக அணிக்கே அதிர்ச்சி அளித்தது பாகிஸ்தான் அணி

உலக பதினொருவர் அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

அதிதீவிர பாதுகாப்புடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற உலக பதினொருவர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பாபர் அசாம் 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் திசர பெரேரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 198 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிங்கிய உலக பதினொருவர் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் அந்த அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக டு பிளிஸஸ் மற்றும் டேரன் சமி ஆகியோர் தலா 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் சோஹைல் கான், ரம்மான் ரயீஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி இன்று (புதன்கிழமை) லாகூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்