குடும்பத் தகராறு.. கணவன் மனைவி தற்கொலை! கடலூரில் சோகம்!.

குடும்பத் தகராறு.. கணவன் மனைவி தற்கொலை! கடலூரில் சோகம்.
கடலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுத்திகுளம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவரது மனைவி சீத்தாலட்சுமி இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில், கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதே போன்று நேற்றிரவு ஏற்பட்ட சண்டையின் காரணமாக, வெங்கடேசன் விஷம் குடித்தார்.
இதனை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் தெரிவிப்பதற்காக உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது வெங்கடேசன் மனைவி சீத்தாலட்சுமியும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த தற்கொலையை பார்த்த அவரது 3 பெண் குழந்தைகள் கதறி அழுது கொண்டிருந்தனர். பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்