டொனால்ட் டிரம்ப்க்கு பேரக்குழந்தை: ஒன்பதாவது முறையாக தாத்தா ஆன அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்க்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ‘எரிக் ல்யூக் டிரம்ப்’ என பெயரிட்டுள்ளனர்.

நியூயார்க்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்க்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ‘எரிக் ல்யூக் டிரம்ப்’ என பெயரிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப்பின் மகனான எரிக் டிரம்ப் – லாரா தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையின் புகைப்படத்தை எரிக் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்குழந்தைக்கு எரிக் ல்யூக் டிரம்ப் என பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேரக்குழந்தை பிறந்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அதிபர் டிரம்ப், எரிக் டிரம்ப் – லாரா தம்பதியினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்