பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிருக்கு பெண் குழந்தை: இங்கிலாந்தில் பிறந்தது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொகமது அமிர் – நர்ஜிஸ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிர். மேட்ச் பிக்சிங் காரணமாக தடைபெற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பினார்.

ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் மொகமது அமிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது இங்கிலாந்தில் தங்கியிருந்து எசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது மனைவி நர்ஜிஸ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை மொகமது அமிர் தெரிவித்துள்ளார்.

இன்று பாகிஸ்தான் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. சுமார் 8 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் போட்டியில் மொகமது அமிரால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15-ந்தேதி நடைபெறும் கடைசி போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்